search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி சிறை தண்டனை"

    சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு 15 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள பொம்மனப்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 33). விவசாயி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி பொம்மனப்பாடியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

    மேலும் நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மீறி சொன்னால் கொலை செய்து விடுவேன் என்றும் சிறுமியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    வழக்கு விசாரணை முடிந்ததையடுத்து நீதிபதி விஜயகாந்த் தீர்ப்பு அளித்தார். அதில், ராஜாவுக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.15 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 5 ஆண்டுகளும், 3 மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ராஜா திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×